ஆங்கிலேயர்கள் அமெரிக்காவிற்கு எப்போது வந்தார்கள், எப்படி வந்தார்கள் என்பதற்கு பல கதைகள் உண்டு. இது எங்க ஊரு கதை. அமெரிக்காவுல எந்த ஊருக்கு போனாலும் மண் நிறத்தில்(Brown colour) ஒரு பலகை மாட்டி வைத்து இருப்பார்கள், இது வரலாற்று சிறப்பு வாய்ந்த நகரம் (Historic city) என்பதற்கான அடையாளம். எங்கள் ஊரிலும் ஒரு பலகை மாட்டி வைத்து இருக்கிறார்கள்,வரலாறு என்னவென்றால்?
1670 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பொன்னு கிடைத்தாலும், கிடைக்காத புதன் கிழமை சுமார் 148 ஆங்கிலேயர்கள் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் உட்பட சார்லஸ் டவுனி லேன்டிங்கில், அல்பி மாரேலல் (Albemarle pointe) என்னும் இடத்தில் வந்து இறங்கினார்கள் (இப்பொழுதும் இந்த இடத்தை காணலாம்). வந்தவர்கள் மிக விரைவிலேயே வீடு கட்டி அங்கேயே ஒரு சிறு சமூகத்தை (Colony) உருவாக்கினார்கள். தங்களுக்கு தேவையான உணவையும் அங்கேயே தயாரித்து கொண்டணர், பாதுகாப்பிற்காக தங்கள் வீடுகளைச் சுற்றிலும் மரத்தினாலான வேலியை அமைத்துக் கொண்டனர். இதுதான் வெள்ளைகாரர்கள் கரோலினாவந்த கதை, பிறகு இங்கிருந்து கரோலினாவின் மற்ற பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.




அகழ்வாராய்ச்சியாளர்கள் இன்னமும் இங்கு ஆங்கிலேயர், சிவப்பு இனத்தினர் மற்றும் கருப்பு இன மக்களைப்பற்றியும் அவர்கள் பண்பாடு, வியாபாரம் மற்றும் கலை ஆகியவற்றை பற்றியும் ஆராய்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.சரி இப்ப இங்க என்ன இருக்கின்றதுன்னா? குழந்தைகள் கண்டு மகிழ ஒரு சிறு மிருகக்காட்சி சாலை உள்ளது. இங்கு கரோலினா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியிலுள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளது.


அழகான சிறு குளங்களும் அதில் பறக்கின்ற கொக்குகளும் மிக அழகான காட்சி (அமர்ந்து பார்க்க ஆங்காங்க இருக்கைகள் உள்ளது). நடந்து செல்லும் நடை பாதையின் இருபுறங்களில் பசுமையான மரங்கள் உள்ளன.



80 ஏக்கர் நிலப்பரப்பில், ஆயிரக்கனக்கான அசாலியஸ்(Azaleas), கெமிலியாஸ்(Chamellias) மற்றும் ஓக் (live oak) மரங்களும் உள்ளன. இங்குள்ள தகவல் தொடர்பு மையத்திலேயே ஒரு சிறு அருங்காட்சியகமும் உள்ளது. 



இங்கு குழந்தைகள் கொண்டு செல்வதற்கான தள்ளு வண்டி இலவசம், ஆனால் நமக்கு $5 நுழைவுக் கட்டணம். இந்த இடத்தை பற்றி நான் மேலும் சொல்வதை விட நீங்களே மாயோனின் புகைப்படங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம். 

முகவரி: 1500 Old Towne Rd, Charleston.


முகவரி: 1500 Old Towne Rd, Charleston.
எழுதியவர்: இன்பம், இனியாழ்.
டம் : மாயோன், ராதை.








இதான் சிடி மெரினாவுல சூரியன் மறையுறது. எங்க ஊருல சூரியன் நல்லாதான் இருக்கு!


வண்ணத்துப் பூச்சி கூடம்: இங்கு சார்லஸ்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள பல விதமான வண்ணமயமான வண்ணத்துப்பூச்சிகள் வளர்க்கப்படுகிறது. ஒவ்வொரு காலத்திற்கு ஏற்றவகையில் இங்கு பல்வேறு விதமான வண்ணத்துப் பூச்சிகளை நீங்கள் பார்த்து ரசிக்கலாம். வண்ணம் என்றால் வண்ணம் அப்படி ஒரு அழகுவண்ண வண்ணத்துப்பூச்சிகளின் கூட்டம், குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியில் சிறகடித்து பறக்க ஆரம்பித்துவிட்டனர். நம்ம மாயோன் அண்ணன் மட்டும் சுமார் 500 படங்கள் எடுத்துத்தள்ளியிருக்கின்றார் என்றால் பாருங்களேன். (அவர் வீட்டுச்சுவற்றில் பல வண்ணத்துப்பூச்சி படங்கள் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது, உங்களுக்கும் வேண்டும் என்றால் மாயோனை தொடர்புகொள்க). நம்ம பனையேறி அண்ணன் மட்டும் வத்திருந்தால் பல கவிதைகளை எழுதித்தள்ளியிருப்பார். இங்கு வண்ணத்துப்பூச்சிகள் இயற்கையான சூழலில் வளர்க்கப்படுகின்றது. வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்கை சுழற்ச்சி பற்றிய விளக்கப்படமும் உள்ளது. மேலும் உள்ளேயே தேனீ கூடு ஒன்றும் உள்ளது.


















நம்ம அண்ணன் மாயோன் ஒரு நாள் திடீரென மாலை 4.30 மணிக்கு கதவைத் தட்டி எங்கேயாவது வெளியில் போகலாம் என்றார். நேரமாகிவிட்டதே என்றோம். அவர் மிக அருகிலேயே ஒரு இடம் உள்ளது, மாலை நேரம் அல்லது காலை நேரம் தான் அங்கு பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்றார். சரி என்று நாங்களும் கிளம்பினோம். மனைவிமார்கள் ஒப்பனை செய்து கொண்டு வருவதற்கு 5.30 மணியாகிவிட்டது. முதலில் பார்ப்பதற்கு மர நடைபாதை (Board walk ) போல இருந்தது. ஆனால் உண்மையிலேயே அது மிக அருமையான இடம் தான்.
இந்த இடம் 1864 ம் ஆண்டு உள்நாட்டுப் போருக்கு முன்பு மெளன்ட் பிளெசண்ட் மற்றும் சுலைவன் தீவை இணைக்கும் மரப்பாலமாக இருந்தது. அப்போது அதன் பெயர் கோவ் இன்லெட் (cove inlet). சிறு வாகனங்களின் போக்குவரத்திற்கு உபயோகித்து வந்தனர். பிறகு 1927 ஆம் ஆண்டு பிட் தெரு பாலம் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது இதை வாகனப் போக்குவரத்திற்கு உபயோகிப்பதில்லை. இப்ப இதை பிக்கட் பாலம் ( Picket Bridge) என்று பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

அமைந்திருக்கும் இடமும், பாதையும்: Pitt Street Bridge, Mt. Pleasant (near Charleston) 