Wednesday, April 11, 2007

பருவாச்சியான் படமெடுக்கும் கதையும், சில பூக்களும்

நம்ம பருவாச்சியான் பயங்கரமா படமெடுப்பாருன்னு ஒங்களுக்கு ஏற்கெனவே தெரியும். இப்ப அவரு எப்படி படமெடுப்பாருன்னு சொல்லுறேன்.பருவாச்சியான் என்ன செய்யிறாருன்னா, அந்தக் குழாய் நீண்ட பொட்டி இருக்கு பாருங்க, அதான் கேமரா, அதைத் தூக்கிக்கிட்டு தெருத்தெருவாத் திரியிறாரு. எதாச்சும் கொஞ்சம் கலர் கலரா இருந்துட்டாப் போதும். உடனே கேமரா, ஸ்டார்ட், ஃபோகஸ் அப்படின்னு அவரு மூளைக்கு செய்தி போயி நிப்பார், மண்டி போடுவார், குந்துவார், படுப்பார். இவரோட கலாப்பார்வைக்கு முன்னாடி ஒருத்தரும் போக முடியாது. ஆமா நடைபாதைக்குக் குறுக்கே படுத்துக் கிடந்தா எப்படிப் போறது, அதுவும் சரிதான்.

இப்படியாகப் போன பருவாச்சியான் இந்த வசந்த காலத்துல எடுத்த பூப்படங்கள்தான் இதெல்லாம். சும்மா சொல்லப்புடாது. பனை நிலத்தில பூவெல்லாம் நல்லாத்தான் இருக்கு. இதையெல்லாம் எப்புடி எடுத்தாருன்னு கேக்கனும்னா அவருகிட்டதான் கேக்கணும். கேட்டா, 1.6x100, 35mm, 1.2, 1/400 அப்படின்னு ஏதேதோ நம்பராத்தான் சொல்லுவாரு. நமக்கு எதுக்கு நம்பரு, படம் மட்டும் போதும்னு போற ஆத்மாக்களா நீங்க இருந்தாலும் சரியே.













எழுதியவர்: பனையேறி
படங்கள்: பருவாச்சியான் (அதான் படத்துலேயே எழுதியிருக்கே, அப்புறமென்னன்னு கேக்குறீங்களா? சும்மா ஒரு நாலு எடத்துல நம்ம பேரு இருக்கட்டுமேன்னுதான்!)