


பாதை பச்சைப்பசேல் என்ற புல்வெளியுடன் இருபுறமும் சுமார் 30 பனை மரங்கள் உள்ளன. இங்குள்ள மரப்பலகையில் அமர்ந்து அந்த தென்றல் காற்றை சுவாசிப்பதே அலாதி இன்பம்தான். அதற்கும் மேல் அங்கு அமர்ந்து காலை சூரிய உதயத்தையும், மாலை சூரியன் மறைவதையும் காணலாம். அது ஒரு கொள்ளை அழகு.

"மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி..." என்று இனிமையான கானத்தை நம்மையே அறியாமல் பாடவைக்கின்ற இடம். நம்ம சார்லஸ்டனின் அழகையும் இங்கே இருந்து ரசிக்கலாம், கண்ணுக்கு விருந்தளிக்கும் ரம்மியமான காட்சிகள்.( கல்யாணத்திற்கு முன்பு பெண்ணுடன் சென்று வந்தால் மிகவும் ரசிக்கலாம்). மிதிவண்டி ஓட்டுவதற்கும், மீன் பிடிப்பதற்கு மற்றும் கயாக்(kayak) செல்வதற்கும் ஏற்ற மிகவும் அழகான, மன நிறைவான இடம்.

Take US 17 across the Cooper River Bridge from Charleston. Bear right on Business 17 (Colemann's Blvd) through Mt. Pleasant and across Shem Creek to S.C. 703. At the next light, turn right on McCants Dr. and go about 12 blocks. Then turn left on Pitt St. Pitt St. ends at a paved and blocked-off causeway (now a city park).

எழுதியவர்: இன்பம், இனியாழ்
படம் : மாயோன், ராதை
பதிவதில் உதவி: பனையேறி