Friday, May 4, 2007

தேவதை ஓக் மரம் (Angel Oak Tree)

அட நம்ம ஊரு அடையாறு ஆலமரம் போல் இங்கேயும் ஒரு வயதான மரம் இருக்காமே? கேள்விப்பட்ட உடனே புகைப்படக்காரர் மாயோனுடன் புறப்பட்டுச் சென்றோம்.
எங்கே இருக்கின்றது?
முகவரி: 3688 தேவதை ஓக் சாலை, ஜான்ஸ் தீவு (Johns island), தென் கரோலினா 29455.


உயிருள்ள பழமையான மரங்களில் இதுவும் ஒன்று. இந்த மரம் 1500 ஆண்டுகள் பழமையானதாம். இது 65 அடி உயரமானதாகவும், 17000 சதுர அடி அளவுக்குப் பரந்து விரிந்தும் உள்ளது. மரத்தின் சுற்றளவு 25 அடி. (அடையாறு ஆலமரம் 500 ஆண்டுகள் பழமையானது 40,000 சதுர அடி பரந்துள்ளது). கொலம்பஸ் அமெரிக்காவுக்குள் வருவதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னேயே இதற்கான விதை விதைக்கப்பட்டுள்ளது.


இது பல சூறாவளி காற்றுகளையும், பல்வேறு இயற்கைச் சீற்றங்களையும் சந்தித்து இன்னமும் கம்பீரமாக நிற்கின்றது (பல கைத்தடிகளோடு). ஹுகோ சூறாவளியின் போது (hurricane Hugo) பலத்த சேதம் அடைந்தாலும், பிறகு சிரமப்பட்டு சீர்ப்படுத்தப்பட்டது.


இம் மரமானது முன்னொரு காலத்தில் ஆப்ரகாம் வெயிட் என்ற தனியாரிடம் இருந்தது, இப்போது சார்லஸ்டன் மாநகராட்சியே நிர்வாகிக்கிறது. நம்ம ஊரு அடையாறு ஆலமரம் போலவே இங்கே வந்தாலும் கூட மனதுக்கு மிகவும் இதமாக உள்ளது. கியாவா தீவு போகும் போது வழியிலே இங்கேயும் சென்று வரலாம். பார்பிக்யு (BBQ) செய்ய இடமுள்ளது. செலவே இல்லாமலே பார்த்து வரலாம் (No entrance fee!).

எழுதியவர்கள்: இன்பம், இனியாள்
படம் : மாயோன், ராதை
பதிவதில் உதவி: பனையேறி