
நம்ம மனைவிமார்களுக்கு கார் ஓட்ட கத்து கொடுக்கணும்ணா MUSC-ஹாகூட் கார் நிருத்தும் இடமும் (hagood parking lot) பிரிட்டில் பான்க் பூங்கா (brittle bank ) க்கும் போவோம். ஆனால் இதற்கு மிக அருகிலேயே ஹாமில்டன் பூங்கா (Hamilton Park) உள்ளது. இங்கு மனைவிக்கு கார் ஓட்ட கத்து கொடுத்துக்கொண்டே மனதுக்கு ரம்மியமான இடத்தையும் பார்த்துவிட்டு வரலாம்.


குழந்தைகள் பார்த்து ரசிக்க வாத்து கூட்டமும்,குதூகலித்து மகிழ ஒரு நீருற்றும் உள்ளது. நாம் பார்த்து மகிழ மலர் கூட்டம் உள்ளது. இங்கு மிதி வண்டி ஓட்டலாம், sun bath எடுக்கலாம். நாம் நடப்பதற்காகமிக அருமையான நடை பாதை உள்ளது.




இங்கு தான் வருடா வருடம் குழந்தைகளுக்காண ஓட்ட பந்தயமும், Piccola Spoleto விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும் பல இன்னிசை கச்சேரிகளும் நடைபெறுகிறது.

ஹாமில்டன் பூங்காவிற்கு அருகிலேயே சிட்டாடல் கல்லூரி உள்ளது, இங்கு வெள்ளி கிழமைகளில் நடை பெறும் பரேட் மிக பிரசித்தம். என்ன மனைவிக்கு கார் ஓட்ட கத்துதர கிளம்பிவிட்டீர்களா?

எழுதியவர்: இன்பம், இனியாழ்
படம் : மாயோன், ராதை
பதிவதில் உதவி: பனையேறி
3 comments:
படம், பதிவெல்லாம் அழகு. ஆனா இந்த பனையேறியை கொஞ்சம் இறக்கி விடுங்கப்பா!
இந்த வாத்து பார்க்-க்கு இவ்வளவு அழகான படங்களா?
முதல் படம் வெகு அருமை.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
Post a Comment