Wednesday, February 27, 2008

நம்ம ஆட்டத்தைப் பாருங்க!!




போன மாசம் நம்ம தமிழ்ச் சங்கத்துல பொங்கல் விழா நடந்துச்சு. Youtubeல கிடைச்ச படங்களைப் பார்த்து நாங்க போட்ட ஆட்டம் இது. ஒன்னு ஒயிலாட்டம் (மாதிரி), இன்னொன்னு கோலாட்டம் (மாதிரி). இதைப் பாத்துட்டு இன்னும் நிறைய கத்துக்கிட்டு ஒழுங்கா ஆடணும்னு ஒரு வெறி வந்திருச்சு. அதோட விளைவா இந்த வேண்டுகோள்: உங்களுக்கு தேவராட்டம், கும்மி (அய்யோ சாமிகளா வலைப்பதிவு கும்மி வேண்டாம்!) இதுக்கான வீடியோ (+ஆடியோ) எங்கே கிடைக்கும்னு விபரம் தெரியுமா? தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்! நன்றி, நன்றி!

இப்ப எங்களோட ஆட்டம் (பாத்துட்டு youtubeலேருந்து கெளம்பி அப்படியே போயிடாம, இங்க வந்து எங்க கேள்விக்கு விடை சொல்லிட்டுப் போங்க:))

எழுதியவர்: பனையேறி

3 comments:

திருமதி. பனையேறி said...

குழந்தைகளின் நிகழ்ச்சிகளையும் இணைக்க முடியுமா?
பிள்ளைகளின் கடின முயச்சியையும் பாராட்டுவததே சிறந்ததாகும்.

நன்றி

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

உங்க ஊருல இருந்திருந்தா நானும் கூட ஆட வந்திருப்பேன் (இல்லாத தைரியத்துல சொல்றேன்) :-)

இந்தப் படங்கள இங்க நீங்க இணைச்சுருக்கறது தெரியாம யூட்யூப்ல தேடிப் பாத்துக்கிட்டு இருந்தேன்.

நீங்க கேட்ட படம் பாட்டு பத்தியெல்லாம் தெரியல. கெடச்சு நீங்க ஆடுனா மறுபடியும் வலைல போடுங்க, பாத்துக்கறோம்.

ஒயிலாட்டத்த என் பதிவுல இணைச்சுருக்கேன். நன்றி.

Panainilam said...

செல்வராஜ், விருந்தினர்களும் ஆடலாம். அதனால் நீங்கள் இந்தப் பக்கம் வந்தால் நிச்சயம் ஆடப் போகிறீர்கள் :))
உங்கள் பதிவுக்கு நன்றி.
இந்தப் பாடல் தவசி என்ற படத்தில் வருகிறது. இதற்கான உந்துதல் 2007 பெட்னா திருவிழாவிலிருந்து கிடைத்தது. அவர்களுக்கும், யூக்குழாயிலிருந்து கிடைத்த இண்டியாபெஸ்ட் ஒயிலாட்டக் குழுவுக்கும்தான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்!