Wednesday, March 4, 2009

தமிழினப் படுகொலையைக் கண்டித்து சார்லஸ்டனில் போராட்டம் !

அன்புடையீர்,
வணக்கம்!
ஈழத்தில் சிங்கள இனவெறி அரசினால் நிகழ்த்தப்படும் தமிழினப் படுகொலை, உலகத் தமிழர்களை உலுக்கியெடுப்பதைப் போல, பனைநிலத் தமிழ்ச் சங்கத்தினரின் நெஞ்சங்களையும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்துகிறது. நாகரீகமடைந்த உலகில் நிகழும் இவ்வன்கொடுமையை எதிர்த்துக் குரல் கொடுக்கவும், அமெரிக்க அரசினை விரைந்து தலையிட்டு, தமிழர்களுக்கு விடியலையும் விடுதலையையும் வழங்கிட ஆவன செய்யுமாறு வலியுறுத்தவும் எங்களது தமிழ்ச் சங்கம் முடிவெடுத்திருக்கிறது. இதனை முன்னிட்டு, வரும் மார்ச் 7ஆம் நாள் சனிக்கிழமை, மதியம் 2 முதல் 5 மணி வரை, சார்லஸ்டன் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள மரியன் சதுக்கத்தில் (Marion Square, Charleston, SC) யூத இனப்படுகொலை நினைவுச் சின்னத்தின் அருகில் ஒரு அமைதிப் பேரணியை நடத்தவுள்ளோம். அனைவரும் வந்து கலந்துகொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகிறோம். நன்றி!

1 comment:

காயத்ரி said...

நாகரீகம் வளர்ந்துவிட்ட காலக்கட்டத்திலும் இன படுகொலைகள் நடைபெறுவது மிகவும் வேதனைக்குரியது....இதனை உலக நாடுகள் அனைத்தும் அறிந்துக்கொண்டு தகுந்த நடவடிக்கைகள் எடுத்து தீர்வு காண வேண்டும்!

உங்கள் போராட்டம் அமைதியாக நடைபெற இந்திய தமிழர்கள் சார்பில் நான் வேண்டிக்கொள்கிறேன்! உங்கள் போராட்டம் அனைவரின் கவனத்தையும் திசை திருப்பட்டும்!நன்றிகள் பல!