Sunday, January 31, 2010

பனைநிலம் தமிழ்ச்சங்கப் பொங்கல் விழா 2010




வீட்டு முற்றத்தை சாணம் கொண்டு மெழுகி அலங்கரிக்க!

காளைகளின் மணிச்சத்தம் கிணுகிணுக்க !
ஜல்லிக்கட்டு ஊரையே கிடுகிடுக்க!
செவ்விதழில் செங்கரும்பு தித்திக்க !
பொலிவுடனே பொங்கியதே பொங்கல்
நம் மனப்பானை மகிழ்வுடனே பொங்கிடவே
சார்லஸ்டன் மக்கள் அனைவரும் ஆனந்தமாக கொண்டாடினோமே!

-பொறுங்க பொறுங்க!
இப்பிடியெல்லாம் சார்லச்டன்ல பொங்கல் விழா நடந்ததுன்னு சொல்லணும்னு ஒரு ஆசைதான். ஆனா அமெரிக்காவில இப்பிடியெல்லாம் காளைகளின் மணிச்சத்தம் கிணுகிணுக்க, ஜல்லிக்கட்டு ஊரையே கிடுகிடுக்க, பொங்கல்விழாவ நடத்துனா இந்தஊரு போலீஸ்காரங்க அவங்களோட வாகனங்களோட அலாரம் கிணுகிணுக்க, நம்ம இதயத்துடிப்பு படபடக்க, நாடி நரம்பெல்லாம் துடிதுடிக்க அப்பிடியே அள்ளிட்டு போயிருவாங்க! அதனால மகாசனங்களே இதெல்லாம் இல்லாமத்தான் நாம பொங்கல் விழாவை இங்க நடத்தியாகணும்.

சரி! அதுக்காக அப்பிடியே நாம விட்டுற முடியுமா...நம்ம ஆளுங்க எங்க போனாலும் நம்ம பண்பாட்டு அடையாளங்கள மறந்துற முடியுமா?கலாச்சாரத்தை கொஞ்சமாவது பிரதிபளிக்கணும் இல்லையா?...அதுவும் நம்ம சார்லஸ்டன் பனைநிலம் தமிழ்ச் சங்கம்னா சும்மாவா?

பொங்கல்விழா பரபரப்பு பலவாரங்களுக்கு முன்னாடியே ஆரம்பம் ஆயிடுச்சு! கலைநிகழ்ச்சிகள் அருமையாக வர திட்டம் போட்டாச்சு. அறுசுவை உணவுப் வகைகளாகட்டும், ஆடல்பாடல் நிகழ்ச்சிகளாகட்டும், பட்டிமன்றமாகட்டும், பாட்டுமன்றமாகட்டும், குழந்தைகளோட நிகழ்ச்சிகளாகட்டும், எல்லாம் அருமையா தயாராகிட்டு இருந்தது.

பொங்கல்விழா நடக்கிற சனிக்கிழமை வந்திடுச்சு.வருணபகவான் வழக்கம்போல கோவிச்சுட்டார். நம்மளுக்கு வார விடுமுறைன்னாலே அவருக்கு கொஞ்சம் பொறுக்காது - அப்பிடியே வானத்திலிருந்து இறங்கிவந்து குசலம் விசாரிச்சுட்டு போவார். இந்த மாதிரி விழான்னா கேட்கவா வேணும் - அவரும் ஒரு ஆட்டம் போட்டுட்டார். அதப்பாத்து நம்ம பயப்பட்டுருவோமா என்ன?...இடியா, புயலா, மழையா,பனியா நம்மை ஒன்றும் செய்யாதே.ன்னு! ஜோரா வேலைகளைப் பாக்க ஆரம்பிச்சுட்டோம்.

இந்த தடவையும் டேனியல் தீவுப் பள்ளி அரங்கையே வித்யா - கணேஷ் உதவியுடன் தேர்ந்தெடுத்தி்ருந்தோம், அருமையான இடம். மேடை அமைப்பு, பார்வையாளர்களுக்கான வசதி, ஒலி, ஒளி அமைப்பு, மற்றும் உணவரங்க வசதிகள் அத்தனைகளும் அருமையா அமைந்த இடம். அஞ்சு மணிக்கே ஆளுக அசத்தலா வேலைகள பாக்க ஆரம்பிச்சாச்சு. கொஞ்ச நேரத்தில பொங்கல் திருவிழாக்கூட்டம்.....எங்க பாத்தாலும் கலகலப்பா இருந்துச்சு.

இந்ததடவை அறுசுவை உணவு விருந்து விழா ஆரம்பமே அளிக்கப்பட்டது. மக்கள் தூதுகலத்தோட பதார்த்தங்களை ரசிச்சு ருசிச்சுட்டாங்க. வழக்கம் போல கணவன்மார்கள் பரிதாமாக பந்திக்காக காத்திருக்க, மனைவிமார்கள் பந்திக்கு முந்தி ஒரு கட்டு கட்டுனாங்க! ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க! அதுசரி ஆம்பிளைங்க? மிச்சம் சொச்சம் எதுவும் கிடைக்காம போயிருமா என்ன. நம்பிக்கை தான் வாழ்க்கை இல்லையா? அதுக்கு பிறகு வந்த சில கணவன்மார்களுக்கு மிச்சம் மீதி கூட கிடைக்கலேன்னு 'வருத்தப்படாத வாலிபர்கள்' பலபேரு பரவலா பேசிக்கிட்டாங்க.




அதைவிட அருமையான விருந்து கலைநிகழ்ச்சிகளோட வடிவில் விழா மேடையில காத்துகிட்டு இருந்தது. ஆனந்தி விழாவோட முன்னுரையை அளித்தார். விழாவை செந்தில் மற்றும் வானதி அருமையா தொகுத்து வழங்குனாங்க.







தமிழ்த்தாய் வாழ்த்து பாடி, குத்துவிளக்கு ஏற்றி விழாவ தொடங்கினாங்க. கடவுள் வாழ்த்தாக திருக்குறளை இனிமையா அஸ்ரிதா, அமிர்தா, மாசிலன், மற்றும் கோகுல் பாடினது செவிக்கு இசையா ஒலித்தது. திருக்குறள் உலகத்துக்கே பொதுமறை. நம்ம குழந்தைகளுக்கு அது ஒரு ஊக்கமறையா இருக்குதுன்னு அதிலிருந்தே தெரிஞ்சது. அதற்கடுத்தபடியாக அவர்களே நாட்டுபுறப் பாடலுக்கு நடனம் ஆடி நாட்டுப்புறத்தையே நம்ம கண்ணுக்கு முன்னாடி வந்து நிறுத்துனாங்க.



கின்னஞ்சிறு சிட்டுக்கள் குட்டி குட்டி பாடல்களை மெட்டு மெட்டில்லாமல் பாடினாலும் எட்ட எட்ட இருக்கும் சொர்க்கம்கூட நம்ம பக்கத்துல வந்திரும் இல்லையா? அதைத்தான் நம்ம சிட்டுக்கள் பூரணி, ஜனனி, மோகன், இனியன் மற்றும் ஷிவானி அவங்கெல்லாம் வண்ணத்துப்பூச்சி பாடலை அழகா பாடினாங்க.




அதற்கடுத்து அமிர்தா மற்றும் அதிதி மாறுவேட நிகழ்சியில, புலியாவும், கிராமியப்பெண்ணாகவும் வந்து அசத்துனாங்க.



குழல் இனிது யாழ் இனிது, அதனினும் இனிது நம் பிரணாப் மற்றும் கோகுலுடைய வயலின் இசை இனிது. அவங்க வயலினுடைய இசை கேட்டு நம்ம மக்கள் மயங்கிட்டாங்க.






அடுத்து சிறுமி நிவேதாவோட நடனம். அவங்களோட அருமையான ஆட்டத்தைப் பாத்துகிட்டு இருந்த நம்ம சின்னப்பசங்க சும்மா இருப்பங்களா; விழா அரங்கத்துல அவங்களும் ஒரு ஆட்டம் போட்டாங்க. இந்தக் குழந்தைகளோட நிகழ்ச்சிகளைப் பார்த்து நம்ம மனசும் குழந்தைகளாவே மாறிடுச்சு.





அதுசரி, ஆட்டம் பாத்தாச்சு பாட்டு? இப்போ பாருங்க...ஒண்ணா ரெண்டா - நாலு பாடல்கள். கார்த்திகா, செந்தில், யுவராஜ் மற்றும் பிரகாஷ் தனித்தனியா பாடல்களைப் பாடி பார்வையாளர்களை இசைவெள்ளத்தில மூழ்கடிச்சாங்க.


















இசைவெள்ளத்தில மூழ்கி முத்தெடுக்க போன நம்மள அப்பிடியே மீட்டு வந்ததுதான் நாடகம். உழவர்களோட பிரச்சினைகளைப் பற்றிய இந்த நாடகத்தில் யுவராஜு, குமரன், பத்மநாபன், மற்றும் உதய் இணைந்து நடித்தது நம்முடைய கவனத்தை கவரும் வண்ணம் இருந்தது.





இந்த பொங்கல் நிகழ்ச்சிகளை சுவராசியப் படுத்துவதற்காகவே வினாடி விடை நிகழ்ச்சிகள் இடையே வழங்கப்பட்டது. வினாடி வினா பரிசு மழையில நனைவதற்காக குடைகளை வீசி எறிஞ்சுட்டு விடைகளை நிரப்பிகிட்டு இருந்தாங்க (எதுகை மோனையா இருக்குறதுக்காக, குடை, விடை அப்பிடின்னு இப்பிடின்னு இடையில வார்த்தைகள் வரும், அதெல்லாம் கண்டுக்காதீங்க மகா சனங்களே!). நிறைய வடைகளைச் சாப்பிட்டு மன்னிக்கவும் நிறைய விடைகளை சரியாகச் சொல்லி பரிசுகளை அள்ளிட்டு போனவங்க இளங்கோ மற்றும் பாட்ஷா.

நம்மூரு தொலைக்காட்சிகளில் அவ்வப்போது வந்து ஓரளவு சந்தோசமா இருக்கிற கணவன் மனைவிகளுக்கு இடையே குழப்பம் சச்சரவு உருவாக்குகிற நிகழ்ச்சி எது தெரியுமா?...கண்டுபிடுச்சுட்டீங்க....அதேதான் - ஜோடிப்பொருத்தம் நிகழ்ச்சி. இதுவரை ஜோடிகளுக்கு குழப்பமே எதுவும் வரல்லயேன்னு, மூளையை கொஞ்சம் கசக்கி ஜோடிப்பொருத்தம் நிகழ்ச்சிய தயாரிச்சிருந்தாங்க 'குழப்பப்படாத வாலிபர் சங்க' அன்பர்கள் . ஒவ்வொரு வீட்டுக்கும் வீடியோவோட படையெடுத்து கணவன் மனைவியை கேள்விக்கணைகளை தொடுத்து, பதிவு பண்ணி அதை சுவராசியமா குறுகிய காலத்துல ஸ்ரீநிவாசன், பிரியா, யுவராஜ், மற்றும் குமரன் குழுவினர் தயாரிச்சிருந்தாங்க.


அடுத்ததா வந்ததுதான் பட்டிமன்றம். பட்டிமன்றத்த பாட்டிமன்றமா மாத்திரக்கூடாதுன்னு கலகலப்பா இருக்கிற மாதிரி ஒரு தலைப்பு - "இல்வாழ்க்கையில் அதிகம் விட்டுக்கொடுப்பது ஆண்களா பெண்களா" ? தன் வாழ்க்கையே ஆன்மீகத்துக்காக விட்டுக்கொடுத்திருந்த சந்தோஷ்தான் நடுவர். ஆண்களே என்கிற அணியில செந்தில், ஹரி, மற்றும் யுவராஜு . பெண்களே அப்பிடின்ற அணியில உமா, வினு, மற்றும் சுபத்ரா. ஆரம்பம் முதலே அனல் பேச்சு. அதைகேட்டு பார்வையாளர்களோட மூச்சே நின்னு போச்சு.ன்னு சொல்ற அளவுக்கு இருந்தது இவர்களுடைய சொல்வீச்சு. இதப்பாத்தா சங்ககாலப் புலவர்கள் பலகூடி அருந்தமிழ்கவி ஆராய்ந்து, சொல்வித்தை விளையாடி பைந்தமிழ் வளர்த்த சான்றோர்கள் சபைபோல இருந்தது (சரி, சரி....ரெம்ப அதிகமா போயிடுச்சுன்னு நினைக்கிறீங்களா?! மிகைப்படுத்தாம சொல்லிர்றேன். உண்மையிலேயே ரசிக்கத்தக்க வண்ணம் இருந்தது!). முடிவில் நாட்டாமை சந்தோஷ், இல்லற வாழ்வில் ஆண் பெண் இருவருமே விட்டுக்கொடுப்பதால் இல்லற வாழ்வு வளம் பெரும் என தீர்ப்பு வழங்கினார். 





பிறகு குழந்தைகளுக்கான பரிசுச் சான்றிதல் வழங்குதல் - பரிசுகளை சண்முகராஜன் அய்யா வழங்கினார். நிறைவாக சேர்ந்து சிறுவர், சிறுமியர் அனைவரும் ஒரு கலக்கல் ஆட்டம் போட்டாங்க பாருங்க...அதைப்பார்த்த நம்ம மனசும் ஒரு ஆட்டமா, பாட்டமா பாடி மகிழ்ந்தது.







ஆக மொத்தத்தில பொங்கல் நிகழ்ச்சிகள் அத்தனையும் பார்த்து, ரசிச்சு, ருசிச்சு, கேட்டு, அறுசுவை உணவுகளை உண்டு, நம்ம மனசு செங்கரும்பக் காட்டிலும் சிறப்பா தித்திச்சது. பொங்கலைக்காட்டிலும் பலமடங்கு பொங்கி வழிஞ்சது. நம்ம உழவர்களோட பெருமிதமும், பூரிப்பும் நம்மோட இதயத்துல வந்து கலந்தது.

மக்களே, இன்னும் அருமையான ஒளிப்படங்களை நம்ம கண்ணன் எடுத்து கொடுத்திருக்காரு. அப்பிடியே நம்ம பனைநிலம் வலைத்தளத்திற்கு போயி எல்லாத்தையும் ஒரு பார்வை பாத்திருங்க!...(பனைநிலம் வலைத்தளம் செல்ல)

உங்க எல்லாருக்கும் மறுபடியும் உளங்கனிந்த இனிய பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள் .

(மீண்டும் அடுத்த வலையேற்றத்தில் சந்திப்போம்)

என்றும் அன்புடன்


செந்தில்







(படங்கள்: கண்ணன்)





24 comments:

Anonymous said...

கலக்கிட்டீங்க போங்க. சாப்பாடு சூப்பர். படங்கள் அருமை. எங்களைத்தான் படம் எடுக்க விட்டுட்டீங்க.

BaMa said...

நாங்க டைப் பண்றவரைக்கும், நாங்க யாருன்னு கண்டுபிடிங்க செந்தில்!

BaMa said...

//"காளைகளின் மணிச்சத்தம் கிணுகிணுக்க !"//
சே! ராமராஜனை மிஞ்சிட்டீங்க போங்க! கிராமத்து effectu...

BaMa said...

///வழக்கம் போல கணவன்மார்கள் பரிதாமாக பந்திக்காக காத்திருக்க, மனைவிமார்கள் பந்திக்கு முந்தி ஒரு கட்டு கட்டுனாங்க!///

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை?

BaMa said...

///கின்னஞ்சிறு சிட்டுக்கள் குட்டி குட்டி பாடல்களை மெட்டு மெட்டில்லாமல் பாடினாலும் எட்ட எட்ட இருக்கும் சொர்க்கம்கூட நம்ம பக்கத்துல வந்திரும் இல்லையா? ///

Excellent!

BaMa said...

///பாருங்க...ஒண்ணா ரெண்டா - நாலு பாடல்கள். ///

ஸ்...ஸப்பா இப்பவே கண்ண கட்டுதே!?

BaMa said...

////வினாடி வினா பரிசு மழையில நனைவதற்காக குடைகளை வீசி எறிஞ்சுட்டு விடைகளை நிரப்பிகிட்டு இருந்தாங்க////

எவ்வளவு பிழை இருந்ததோ, அவ்வளவு குறச்சிட்டு எங்களுக்கும் பரிசு கொடித்திருக்கலாம்....

BaMa said...

அழகான கவிதை, ஆழ்ந்த கருத்துக்கள், அருமையான புகைப்படங்கள், நீங்காமல் நம் நினைவுகளில் இந்தப் பொங்கல் விழா! கலக்கிட்டீங்க...

sathishsangkavi.blogspot.com said...

பின்னீட்டிங்க நண்பரே........

படங்கள் அனைத்தும் அழகு.....

மாதேவி said...

சார்லச்டன்ல பொங்கல் விழா அனைத்து நிகழ்ச்சிகளுடனும் சிறப்பாகக் கொண்டாடியது மகிழ்ச்சியைத் தருகிறது.

காயத்ரி said...

செந்தில்! பொங்கல் விழாவைப்பற்றிய தொகுப்பை மிகவும் அழகாக பதிவு செய்திருக்கிறாய், இதே அழகோடுதான் அன்று நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருப்பாய் என்று நினைக்கிறேன்!

கண்டிப்பாக உங்கள் அனைவருக்குமே பொங்கல் திருவிழா மிகவும் தித்திப்பாக இருந்திருக்கும், ஆனால் படித்துப்பார்க்கும் எனக்கு அதோடு உன் தமிழும் மிகவும் தித்திப்பாக இருக்கிறது!

அப்டியே " ஐய்யா எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்"....ஏப்பா உங்க பட்டிமன்றத்துல தீர்ப்பெல்லாம் சொல்லமாட்டாங்களா?
"இல்லறத்தில் அதிகம் விட்டுக்கொடுப்பது பெண்களே" அப்டின்னு நடுவர் தீர்ப்பு சொல்லிருப்பாரு அதனாலதான் நீ அத எழுதல, அப்படித்தானே? ம்ஹ்ம் இதெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது!

புகைப்படங்கள் மிகவும் அருமை, குறிப்பாக மழலையரின் படங்கள்!

உங்கள் அனைவருக்குமே இவ்வாண்டு இனிதாக அமைய என் வாழ்த்துக்கள்!

- செகு - said...

பாமா?????? ஏம்மா இந்தக் கொலை வெறி??!!

குண்டக்க மண்டக்க யோசிச்சு(!!) எழுதி மெய் சிலிர்க்க வச்சிட்டீங்க!

கொஞ்சம் டைம் கொடுங்க! யாருன்னு பார்க்கலாம்.

- செகு - said...

at பாமா



///வழக்கம் போல கணவன்மார்கள் பரிதாமாக பந்திக்காக காத்திருக்க, மனைவிமார்கள் பந்திக்கு முந்தி ஒரு கட்டு கட்டுனாங்க!///

##இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை?##

-இப்பிடி தாய்க்குலம் சாப்பிட்டதுதான் தான் நிறையவே ஓவர் !

--

///பாருங்க...ஒண்ணா ரெண்டா - நாலு பாடல்கள். ///

##ஸ்...ஸப்பா இப்பவே கண்ண கட்டுதே!?##

-நீங்களும் ஒரு பாட்டைப் பாடியிருக்கலாம்...கண்ணு காலு எல்லாமே கட்டிபோட்டிருக்கும் ! கொடுத்துவைக்கல
---


////வினாடி வினா பரிசு மழையில நனைவதற்காக குடைகளை வீசி எறிஞ்சுட்டு விடைகளை நிரப்பிகிட்டு இருந்தாங்க////

##எவ்வளவு பிழை இருந்ததோ, அவ்வளவு குறச்சிட்டு எங்களுக்கும் பரிசு கொடித்திருக்கலாம்...##

-பரிசுப் போட்டி நடுவர் நக்கீரை விட ரெம்ப மோசம், நெற்றிக்கான கொஞ்சம் ரெம்பவே திறந்து வச்சுட்டாரு...என்ன பண்றது தீர்ப்ப மாத்தவே முடியல்ல...
---

//அழகான கவிதை, ஆழ்ந்த கருத்துக்கள், அருமையான புகைப்படங்கள், நீங்காமல் நம் நினைவுகளில் இந்தப் பொங்கல் விழா! கலக்கிட்டீங்க...//

-ரொம்ப தாங்க்சுங்கோ!

- செகு - said...

// Sangkavi said...பின்னீட்டிங்க நண்பரே........

படங்கள் அனைத்தும் அழகு.....//



மிக்க நன்றி சங்ககவி

//மாதேவி said...
சார்லச்டன்ல பொங்கல் விழா அனைத்து நிகழ்ச்சிகளுடனும் சிறப்பாகக் கொண்டாடியது மகிழ்ச்சியைத் தருகிறது.//

பொங்கல் விழாவை பாராட்டியதற்கு நன்றி...முடிந்தால் சார்லஸ்டன் சங்க விழாவிற்கு வருகை தரவும்



//காயத்ரி said...

பொங்கல் விழாவைப்பற்றிய தொகுப்பை மிகவும் அழகாக பதிவு செய்திருக்கிறாய், //

காயத்ரி. பின்னோட்டம் எழுதுனதில ரெம்ப சந்தோசம்!

- செகு - said...

// BaMa said...நாங்க டைப் பண்றவரைக்கும், நாங்க யாருன்னு கண்டுபிடிங்க செந்தில்!//

தெரிஞ்சிருச்சு....அர்த்தநாரீஸ்வரமா இருக்கு உங்க பேரு!

ஆதியை அவர் பெயரிலிருந்தும் மீதியை உங்க பெயரிலிந்தும் எடுத்து ஒன்றிணைஞ்சுட்டீங்க...கூட்டத்தில தான் ஒன்னா சுத்திக்கிட்டிருப்பீங்கன்னு பாத்தா...பெயரிலுமா> ??
பொங்கல் சபையில அவருக்கு விட்டுக்கொடுத்துப் பேசல..ஆனா இங்க முதல் பாதியவே விட்டுக்கொடுத்திட்டீங்க!!..

பின்னூட்டத்திலே ஒரு பொங்கல் விருந்த படைச்சிடீங்க போங்க!!

காயத்ரி said...

ஆண் பெண் இருவருமா விட்டுக்குடுக்றாங்க?

"நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லுங்க" ன்னு என்னால சொல்ல முடியாது, அதனால அவர் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன்! ( உண்மையை சொல்லனும்னா மிக்க மகிழ்ச்சி!சிறந்த நடுவர்! எங்க சாலமன் பாப்பைய்யா மாதிரி!)

கண்டிப்பா அடுத்த வருஷமும் இப்படி அருமையா ஒரு பட்டிமன்றம் நடத்துங்க! அனல் பறக்கட்டும்!

Anonymous said...

பனை நிலமா கொக்கா !!!

விழா எப்படி நடந்ததுன்னு எங்களுக்கு தெரியாது ஆனா நீங்க எழுதினத படிச்சா விழா சிறப்பா நடந்து இருக்குன்னு தெரியுது.

உங்க எழுத்துல கலைGரும் வைரமுத்து வும் வந்து விளையாடி இருக்காங்க.

அடுத்த வருசம் விழா நடக்குறத்துக்கு முன்னாலே blog ல்ல போடுங்க நாங்களும் வாரோம்

வாழ்க வளமுடன்.

Anonymous said...

என்னமோ போங்க ஆக மொத்தத்துல பனை நிலத்துல கலக்குறீங்க.

ம்...ம்...ம் கலக்குங்க நண்பர்களே

BaMa said...

///தெரிஞ்சிருச்சு....அர்த்தநாரீஸ்வரமா இருக்கு உங்க பேரு!////

உங்க Guess தப்பு, "நான் அவள் இல்லை".
என்ன நடக்குது இங்க, கமென்ட்ஸ்தான் அதிகமா இருக்கு.
சில கமென்ட்ஸ் 2 முறை வருது. கொஞ்சம் பாருங்க.

- செகு - said...

இருந்த ஓரளவு மூளையையும் ரெம்பவே கசக்கிப் பாத்தாச்சு..முடியல!
ஏன் இந்த சின்னப்புள்ள விளையாட்டு...

அது சரி..எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்
-- நீங்க நல்லவரா? இல்ல கெட்டவரா?

.............
@ காயத்ரி
பெண்களுக்கு 100% ஆதரவா தீர்ப்பு தராததுக்கு நாட்டாமையை அவங்க வீட்டுக்காரம்மா விரட்டி விரட்டி
அடி கொடுத்ததாக நம்பத்தகுந்த மற்றும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கிறது!
( நல்லவேளை எல்லாம் உள்காயந்தான்..அடுத்த பட்டிமன்றத்துக்குள்ள தானா ஆறிடும்!)

BaMa said...

///-- நீங்க நல்லவரா? இல்ல கெட்டவரா? ////
ahaahaaa, good one.

காயத்ரி said...

"தன் வாழ்க்கையே ஆன்மீகத்துக்காக விட்டுக்கொடுத்திருந்த சந்தோஷ்தான் நடுவர்".

ஏப்பா செந்தில் இப்படின்னு நீதானே எழுதியிருந்தே? இப்போ என்னன்னா அவங்க வீட்டுக்காரம்மாகிட்ட அடி வாங்கினாருங்கறே?!

அப்போ வீட்டுக்காரம்மாகிட்டே அடிவாங்கறவுங்க எல்லாரும் தன் வாழ்க்கையை ஆன்மீகத்துக்கு விட்டுக்குடுத்தவுங்களா?

பனைநிலத்தில் இருக்கும் திருமணமான பெண்களே! முதல்ல இதுக்கொரு பட்டிமன்றம் வைங்கம்மா!

அடுத்த பட்டிமன்றத்துக்குள்ள நீ உன் வீட்டுக்காரம்மாகிட்ட அடி வாங்காம இருந்தியன்னா சரிதான்!

BaMa said...

நம்ம பனையேறி வந்தாச்சா? அவர் இருந்திருந்தா இன்னும் ரெண்டு மூணு நிகழ்ச்சிகள் கெடச்சிருக்கும்....

Anonymous said...

Arumai makkaa! Pinnitteenga!
-Panaiyeri