Friday, October 10, 2008

தமிழ் வாழ்கிறதா அல்லது வீழ்கிறதா?

என்ன, இது ஏதோ பட்டிமன்றத் தலைப்பு மாதிரி இருக்கா? எங்கள் ஊரில் சில மாதங்களுக்கு முன்பு தமிழிலேயே நடந்த அறிவியல் கருத்தரங்கம் பற்றி நண்பர் கந்தன் அண்மையில் ஒரு பதிவு போட்டிருந்தார். தமிழின் இன்றைய நிலைப்பாடுகள்குறித்து சூடான விவாதங்கள் எழுந்தது.

தமிழில் பேச, எழுத, ஏன் 'நான் ஒரு தமிழன்' என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படும் நிலையில், நம் கண்ணெதிராகவே தமிழ் அழிந்துவிடும் என முடித்திருந்தார். விவாதங்கள்அந்தத் தலைப்பைவிட்டு வேறு திசையில் செல்ல ஆரம்பித்ததால், அப்போதைக்கு அந்த விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டியதாயிற்று.

அதற்குப்பின் மனதில் ஒரு வலி, வேதனை. உண்மையாகவே, என் பிள்ளையும், அவனைச் சுற்றியுள்ள சின்னஞ் சிறு நண்பர் கூட்டமும் தலைதூக்கும் தருணங்களில்மொழியிழந்த, முகவரியிழந்த சமூகத்தினராக இருப்பார்களா? நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் தகவல் பரிமாற்றங்கள் நடக்கும் இந்த கால கட்டத்தில், நம் மொழி அழிந்துகொண்டிருப்பதைப் பார்த்து கைக்கொட்டிச் சிரிக்கும் வேடிக்கை மனிதர்களா நாம்? நம்மில் பெரும்பாலானோர், பள்ளி வயது நாட்களை தமிழ்த்தாய் வாழ்த்துடனேயேதுவங்கியிருப்போம். அதில் தாய் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? தமிழை உண்மையாகவே தாயென நினைக்கிறோமா?

நீ என்ன சாதித்துவிட்டாய் அல்லது உனக்கென்ன தகுதி இருக்கிறது, பதிவு போட வந்து விட்டாய் என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. விவாதிக்க வந்தவர்களை தனி மனிதவிமர்சனங்களுக்கு உட்படுத்தும் சிறிய குடுவைக்குள் இருந்து சற்று மேலே வாருங்கள்.

சர்வேதேச சந்தையில் நம் சரக்கை விற்க ஆங்கில அறிவு அவசியம், புலம் பெயர் நாடுகளில் வாழ்பவர்களுக்கு சமூக மொழியாக ஆங்கிலம் அவசியம் என்பது பற்றி நிறையப்பேசியாகிவிட்டது.

எழுத்துரிமை தனி மனித சொத்தாகியுள்ள இந்த நல்ல நேரத்தில், மேலேயுள்ள கேள்விகளுக்கு ஒவ்வொரு தமிழுணர்வாளரின் பதில் என்ன? உங்கள் கருத்துக்கள்வரவேற்கப்படுகின்றன.

எழுதியவர் - பனையோலை.

6 comments:

நசரேயன் said...

தமிழுக்கு முன்னுரிமை கொடுக்க எல்லோரும் முன் வரவேண்டும்

பழமைபேசி said...

தங்களின் ஆதங்கம் நியாயமானதே! நாம் நம்மால் இயன்றதைச் செய்வோம்.

http://maniyinpakkam.blogspot.com/2008/06/blog-post_6942.html

http://maniyinpakkam.blogspot.com/2008/07/blog-post_12.html

http://maniyinpakkam.blogspot.com/2008/10/2_10.html

ஆட்காட்டி said...

கண்டிப்பாக தமிழ் அழியும். உண்மை உறைக்கத்தான் செய்யும். என்ன செய்வது? சிலர் கவலைப் பட்டு என்ன நடக்கும். இது எனது அனுபவம், சிந்தனை. எத்தனையோ நாட்கள் இதை எண்ணீ நான் அழுதிருக்கிறேன். இப்பொழுது தெளிந்து விட்டேன்.

Anonymous said...

நசரேயன், பழமைபேசி & ஆட்காட்டி மூவரின் கருத்துக்களுக்கும் நன்றி. எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது.

Anonymous said...

பனையேறியின் கருத்துக்கள் நம் சிந்தையோடே சிக்கித் தவிக்கின்ற போராட்ட எண்ணங்கள்....எளிதில் தொலைத்து விட முடியாத எண்ணக் கவலைகள்.


"மெல்லத்தமிழினிச் சாகும் அந்த
மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும்
என்றந்தப்பேதை உரைத்தான்ஆ
இந்த வசை எனக்கெய்திடலாமோ!
சென்றிடுவீர் எட்டுத்திக்கும்கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்''

என்று கூறியதால் பாரதி தமிழைச் சாடினான் அப்படீன்னு முதல் வரியிலே சில பேரு மயங்கி நின்னு பாரதியை திட்டி தீர்த்துட்டாங்க அன்னிக்கு....
இன்னைக்கும் என்ன நடக்குதுன்னா, தமிழ் அயலர்களால் அல்ல பெரும்பான்மையான தமிழ் மக்களின் அக்கறையின்மையாலே சிதைந்து வருகின்றதென்று நாம் கவலை கொள்வதை தமிழுக்கு தவறான ஆரூடம் கூறுவதாக சிலர் தவறான அர்த்தம் கொள்கின்றனர்.

மெல்லத்தமிழினிச் சாகும்
என்று அன்றே அஞ்சி வெதும்பிய வார்த்தைகள் அதனினும் மேலாக சிதைந்த நிலைக்கு போகக்கூடாது என்று ஒரு உத்வேகத்தை அளிக்கத்தான்

இப்பிடித்தான் தமிழ் அறிவியல் கருத்தரங்கம் பற்றிய பதிவில் அக்கறையில் சொல்றத ஆத்திரத்தில சொல்றதாக தப்பர்த்தம் எடுத்திட்டாங்க சில பேரு. மருந்து கசக்கத்தான் செய்யும் ...அதோட மகத்துவம் இனிக்கச்செய்யும். அது போலத்தான்.

நம்மவர்களின் இது போன்ற கருத்துக்கள் மற்றும் அக்கவலைகளின் வெளிப்பாடுகள் நோயினை குணமாக்கும் மருந்தென உருவகித்து தமிழை மென்மேலும் சிறப்புறச் செய்யும் செயலல்லவோ.

இது போன்ற அருமருந்தினைக் கொண்டு

மெல்லத்தமிழினிச் சாகும் என்று அப்பேதை கூறுவதை மாற்றி

"இனி மெல்லத் தமிழே வாழும்...." // தமிழ் எனத்தமிழே வாழும் //

என்று மாற்றவேண்டுமேன்பதே நம் அனைவரின் பேரவா.

கந்தன்

குடுகுடுப்பை said...

தமிழைக்காப்பாற்ற போரடலாம். ஆனால் அழிவைத்தள்ளிப் போடலாம்.ஆங்கிலம் சமஸ்கிருதம் போன்று காசில்லாத மொழி அல்ல. விரைவில் ஆங்கிலம் வீழ்த்திவிடும் என்றே தோன்றுகிறது