Friday, October 10, 2008

யோகா- ஓர் அறிவியல் பார்வை

தமிழகத்தில் பிறந்து, இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் (DRDO) உடற்செயலியல் (Physiology) துறையில் ஆராய்ச்சி செய்துவரும் இந்தியாவின் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான முனைவர் செல்வமூர்த்தி அவர்கள் சிறந்த பாடகரும் கூட.

இவர் இ.பா.ஆ.மே.க.தின் முன்னாள் தலைவரும், நாட்டின் ஜனாதிபதியாகவும் இருந்த மேதகு முனைவர் அப்துல் கலாம் அவர்களின் நெருங்கிய நண்பர். திரு. கலாம் அவர்கள் நேரம் கிடைக்கும் பொழுது இவரை அழைத்துப் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்வாராம்.

முனைவர் செல்வமூர்த்தி அவர்கள், தனது ஆய்வு முடிவுகளைப் பற்றி உரை நிகழ்த்த அமெரிக்காவுக்கு வந்திருந்தார். நம்ம ஊர் அரசியல் தலைவர்கள் போல் அல்லாமல் ஏதாவது மக்களுக்கு நல்லது செய்யலாம் என்று துடியாய் துடித்து கொண்டிருக்கும் எங்கள் பனைநிலத் தமிழ்ச் சங்கத் தலைவர், முனைவர் செல்வமூர்த்தி அவர்களை அழைத்து, உங்களின் ஆராய்ச்சியை பற்றி நம் மக்களுக்கு தமிழில் விளக்க முடியுமா என்று வினவ, அவரும் முகமலர்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.

இவர் இ.பா.ஆ. மே. க தில் பணிபுரிவதால் இந்தியப் படைவீரர்களுக்கு
யோகா பயிற்சி கொடுத்து, அதனால் ஏற்பட்ட பலன்களை ஆய்வு செய்கிறார். ஆய்வு முடிவுகளை லேன்செட்(LANCET) என்னும் ஆராய்ச்சி இதழில் வெளியிட்டுள்ளார். யோகாவினால் ஏற்படும் பயன்களை ஏடுகளின் மூலம் அறிந்திருக்கிறோம். அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து ஆய்வு இதழில் வெளியுட்டுள்ள இவரது பணி முதன்மையானதாகும். இதை நான் விளக்கு வதைவிட, இவர் பனைநிலத்தில் ஆற்றிய எளிய தமிழ் உரையில் யோகா என்றால் என்ன, அதன் வகைகள், பலன் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி பற்றிய முழு விவரமும் கீழே படமாக இணைக்கப்பட்டுள்ளது. பார்த்து அறிந்து கொள்ளவும்.

கடந்த முப்பத்தாறு ஆண்டுகளாக யோகா பயிற்சி செய்து வரும் இவர், எப்பொழுதும் புன்னகையுடனும், சுறுசுறுப்புடனும், இளமைப் பொலிவுடனும் காணப்படுகிறார். இவர் எங்களுக்கும் முப்பது நிமிட எளிய யோகா பயிற்சியைக் கற்றுத் தந்தார்.

பிறகு பல நல்ல தமிழ்ப் பாடல்களைப் பாடிப் பரவசப்படுத்தினார். இறுதியாக எங்கள் தலைவரின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) விழா ஒன்றில் இவரும், மேதகு கலாம் அவர்களும் இணைந்து பாடிய அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.....என்ற ஔவையாரின் பாடலைப் பாடி இனிதே நிறைவு செய்தார். பாடலும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு: யோகா மெய்யறிவின் மூலம் அறியப்பட்டது, அதற்கு அறிவியல் விளக்கம் மூலம் தெளிவுபடுத்தினால் தான் உண்மை என்று இல்லை, இருந்தாலும் அறிவியல்பூர்வமாக நிரூபித்தால் மட்டுமே உண்மை என்று நம்புபவர்க்கு அய்யா மிகவும் அருமையாக நிரூபித்துள்ளார்கள்.
நாமும் யோகம் பயின்று எப்பொழுதும் புன்னகையுடனும், சுறுசுறுப்புடனும், இளமைப் பொலிவுடனும் இருப்போம்.
வாழ்க வளமுடனும் நலமுடனும் பல்லாண்டுகள்.!

எழுதியவர்கள் - இன்பம் & இனியாழ்

7 comments:

Anonymous said...

நல்ல பதிவு..வாழ்த்துக்கள்
....
ஓம் ...என்ற மலக்கட்டை
கழிய வைத்தால்
உடலில் உள்ள வாதைஎல்லாம்
ஓடிபோச்சு
தாம் ...என்ற சிறுநீரை
தெளிய வைத்தால்
சடத்திலுள்ள ரோகமெல்லாம் தணிந்து போச்சு
கூம் ...என்ற உமிழ் நீரை
முறிய வைத்தால் கூட்டிலுள்ள பகைஎல்லாம் குலைந்து போச்சு
கோ ....வென்ற இவை மூன்றும்
களங்கம் அற்றால்
கொல்ல வந்த காலனையும் வெல்லலாமே ...!
-ஈஸ்வரன் மெய் ஞான நாடி ....பாடல்

Panainilam said...

திரு சதீஷ்குமார்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
இன்பம்

Anonymous said...

//கடந்த முப்பத்தாறு ஆண்டுகளாக யோகா பயிற்சி செய்து வரும் இவர், எப்பொழுதும் புன்னகையுடனும், சுறுசுறுப்புடனும், இளமைப் பொலிவுடனும் காணப்படுகிறார்.//

நல்ல பதிவு. முனைவர்.செல்வமூர்த்தி ஐயா, அவர்களுடன் நாங்கள் இருந்த சில மணி நேரங்களில், நிறையக் கற்றுக்கொண்டோம். அவைகள்:
வாழ்க்கையின் உயரத்திற்குச் செல்லும் போது, கடைப்பிடிக்க வேண்டிய நிதானம், பொறுமை, தெளிவு, மற்றவர்களை ஒரு சிறு புன்னகையுடன் அணுகும் பாங்கு, மனதை ஒருமுகப்படுத்தும் விதம், தண்ணீரைக்கூட ரசித்து அருந்தச் சொல்லிக்கொடுத்த முறை.....இது போன்ற வாழ்க்கையின் நுட்பங்களை மிக எளிதாக விளக்கிவிட்டுச் சென்றார். ஐயா அவர்களின் மற்றொரு வரவை பனைநிலம் ஆவலோடு எதிர் நோக்கியுள்ளது.

Rex said...

நல்ல தகவல். திரு. செல்வமூர்த்தி அவர்களைப் பற்றி மேலும் விவரங்கள் இருந்தால் தெரியபடுத்தவும் அல்லது விரிவாக எழுதவும். இம்மாதிரியான மனிதர்களை பரவலாக மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும்.

jeevagv said...

நல்ல பயன் தரும் செய்தியை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்!

King... said...

யோகா அறிந்திருக்க வேண்டிய ஒரு விசயம்...

Panainilam said...

பனையோலை, ஜீவா,Rex and King உங்கள் வருகைக்கு நன்றி.
விரைவில் அய்யா பற்றி மேலும் ஒரு கட்டுரை எழுதுகின்றோம்.
அன்புடன்
இன்பம்