பனையேறி பாட்டுக்கு "சார்ல்ஸ்டன்" பத்தி 10 - 12 போட்டோவ "பனைநில"த்துலபோட்டுடுங்கன்னுட்டாரு. நானும் தேடு தேடுன்னு தேடி ஒருவழியா கைக்கு அகப்பட்டத இங்க பதிய போரேன். படங்கள் நிறைய இருக்கு. நேரம் தான் இல்ல. பின்ன நேரம் கிடைக்கிறப்ப அத தனியா பதியிறேன்.
சம்டர் கோட்டை (fort sumter)
அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தின் போது பெரும் பங்காற்றியதாக் கருதப்படும் கோட்டை. சார்ல்ஸ்டன் முகத்துவாரத்தில் உள்ளது. படகில் தான் சென்று பார்க்கமுடியும்.
சம்டர் கோட்டை (fort sumter)
அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தின் போது பெரும் பங்காற்றியதாக் கருதப்படும் கோட்டை. சார்ல்ஸ்டன் முகத்துவாரத்தில் உள்ளது. படகில் தான் சென்று பார்க்கமுடியும்.


அன்னாசி நீருற்று மற்றும் பூங்கா (pineapple fountain)
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பிடித்த இடம். மாலைப் பொழுதைக் கழிக்க அருமையான இடம் இந்த நீருற்று



Y.S.S. யார்க் டவுன் (YSS yorktown)
இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல். இன்று காட்சியகமாக உள்ளது. பார்க்கவேன்டிய இடங்களில் ஒன்று.




கடற்கரை
கடற்கரைகள் என்பது பொருத்தமாக இருக்கும். பாலி கடற்கரை (folly beach), அயில் ஆப் பால்ம் (isle of Palms) கடற்கரை, சுலைவன்ஸ் தீவு (Sullivan’s island) கடற்கரை ஆகியவை சார்ல்ஸ்டனுக்கு அருகில் உள்ளன. கடற்கரைகள் பற்றி நான் சொல்லவா வேண்டும்?





சார்ல்ஸ்டன் பேட்டரி (Charleston battery)
மாலை நடைப்பயிற்சிக்கு உகந்த இடம். சாலையின் இருபுறங்களிலும் பனைமரங்கள் அணிவகுத்திருப்பது கண்கொள்ளாக் காட்சி.




சூரிய உதயம் மற்றும் மறைவு


படகுத்துறை

குதிரை வண்டி சவாரி

புதுப்பாலம்

சில இடங்களப் பத்தி ஏற்கனவே படங்களோட பதிஞ்சிருகோம். கொஞ்சம் உள்ள நொழஞ்சி தான் பாருங்களேன்.

- மாயோன்
4 comments:
மிக அருமையான படங்கள். உங்கள் லென்சின் வழியாக நம் சார்லஸ்டன் இன்னும் அழகாகத் தெரிகிறது. ராதையின் பதிவிற்காக காத்திருக்கிறோம்.
beautiful photos
அற்புத படங்கள். புகைப்பட கலைஞருக்கு எமது வாழ்த்துக்கள்
Post a Comment